உலகம்

ரஷ்யா உக்ரைன் போர் ; இரு நாடுகளுக்கிடையே இன்று பேச்சுவார்த்தை!

துருக்கியின் அண்டலியா நகரத்தில் போர்நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பில் இருநாட்டு அமைச்சர்களும் போர் தொடர்பாக ஒரு சுமுக முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யா, உக்ரைன் மீது தனது தாக்குதலை தொடங்கியது. ரஷ்யா எதிர்பார்க்காத விதமாக உக்ரைனின் ராணுவப்படைகள் எதிர்த்துநின்று பதிலடிக்கொடுக்க, ராணுவ கட்டமைப்பில் பலம்பொருந்திய ரஷ்யா தனது தாங்குதலை தீவிரப்படுத்தியது. ஏவுகணைகள் மூலம் சக்தி வாய்ந்த குண்டுகளை உக்ரைனின் முக்கிய நகரங்களின்மீது செலுத்தியது. அதிகப்படியான ராணுவ வீரர்களை உக்ரைனுக்குள் இறக்கியது.


ரஷ்சியாவை எதிர்க்க உக்ரைன் பொதுமக்களும் ராணுவ வீரர்களோடு சேர்ந்து துப்பாக்கி ஏந்தி போராட உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்தார். பொதுமக்களும் துப்பாக்கி தூக்கியத்தின் விளைவாக உயிரிழப்பு அதிகரித்து உக்ரைன் நிலைகுலைந்தது.
இப்போது மக்கள் உணவு தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைக்காகவும், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளவும் சொந்த உடைமைகளைவிட்டுவிட்டு அகதிகளாக பக்கத்துநாட்டை நோக்கி நடக்கத்தொடங்கியுள்ளனர்.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி போரை நடத்திவந்த ரஷ்யா இப்போது பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு அண்டலியா சந்திப்பை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவு உக்ரைன் மக்களின் வாழ்வை முடிவுசெய்வதாக அமையும் என்பதால் உலக நாடுகளின் கவனத்தை அண்டலியா சந்திப்பு ஈர்த்துள்ளது.

Related posts