உலகம்

தென் கொரிய அதிபர் தேர்தல் ; வெற்றி வாகை சூடினார் யூன் சுக்யோல்!

தென் கொரியாவின் 20 வது அதிபராக பழமைவாத மக்கள் சக்தி கட்சியின் யூன் சுக்யோல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆளும் ஜனநாயக கட்சியின் லீ ஜெ-மியூங்கிற்கும், யூன் சுக்யோல்க்கும் கடும் போட்டி நிலவியது.

தேர்தலில் 48.56% வாக்குகள் யூனும், 47.83% வாக்குகள் ஜே-மியூங்கும் பெற்றிந்தனர். இந்நிலையில் 48.56% வாக்குகள் பெற்ற யூன் தென் கொரியாவின் அதிபராக வாகை சூடினார்.

தென்கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் சுமார் 27 ஆண்டு காலம் வழக்கறிஞராக பணியாற்றினார் என்பதும், முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் மற்றும் தென்கொரிய நீதி அமைச்சர் ஹவாங் கியோ போன்ற மூத்த அரசியல்வாதிகள் மீது வழக்குகளை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.