உலகம்வணிகம்

அமெரிக்காவின் சொத்துக்களை தேசியமயமாக்குவோம் – ரஷ்யா அதிரடி!

ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டித்து பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அண்டை நாட்டு நிறுவனமான ஸ்டார்பக்ஸ், கோகோ- கோலா, மெக்டொனால்ட்ஸ், பெப்சிகோ போன்றவைரஷ்யா முதலீடு செய்வதற்கும் வணிகம் செய்வதற்கும் ஏற்ற இடம் அல்ல என்றும் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதாக கூறிய நிறுவனங்களின் சொத்துகளை தேசியமயமாக்கும் என்ற திட்டத்தை ரஷ்யா பரிசீலித்து வருவதாக செய்தி வெளியானது. அதற்கு, அமெரிக்க நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யக்கூடாது என்று ரஷ்யாவிற்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பதிலளித்துள்ளது.

முன்னதாக, உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையானது நேற்றைய தினம் பெலாரசில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts