இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில், “அதில் அவர் தமிழகப் பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி, அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், காந்தியடிகள் போன்ற பேராளுமைகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் விடியலுக்காகவும் உழைத்த “திராவிடமணி” இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன். என வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

