பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தில் டெங்கு, சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக வைரஸ் இல்லா கொசுக்கள் உருவாக்கபட்டுள்ளது.
சிக்குன் குனியாவை தடுக்கும் கொசு
புதுச்சேரி, கோரிமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் பூச்சியியல் ஆராய்ச்சி மையம் (national Entomology research center) செயல்பட்டு வருகிறது. இங்கு டெங்கு, சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக வைரஸ் இல்லா கொசுக்களை உருவாக்கியுள்ளனர். ஆண் வகை கொசுக்களுடன் புதிய வகை பெண் கொசுக்கள் இன சேர்க்கையின் போது வைரஸ் இருக்காது. டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் இந்த பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளனர்.இந்த கொசுவிற்கு வல்வாசியா என பெயரிடப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து இந்த அறியவகை கொசுக்களை உற்பத்தி செய்துள்ளனர். இதன் ஆராய்ச்சி முடிவுகளை விரையில் வெளியிட இந்திய ஆராய்ச்சி மையம் (IRC) முடிவு செய்துள்ளது.

