100 மில்லியன்
நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’ இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, ஷாம், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ மற்றும் இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனிடையே இத்திரைப்படத்தின் ‘சோல் ஆஃப் வாரிசு’ எனும் மூன்றாவது பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
#Ranjithame crosses 100M+ views now ❤️
Humongous love everywhere 😍📽️ https://t.co/Q56reRvcvc
🎵 https://t.co/gYr0tlcMmD#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @manasimm @AlwaysJani #Varisu #VarisuPongal #RanjithameHits100M pic.twitter.com/TVvguolq7X— Sri Venkateswara Creations (@SVC_official) December 19, 2022

