அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு செய்தி வெளியிட்டுள்ளார்.
பதவி உயர்வு
அவர் வெளியிட செய்தி குறிப்பில், ‘தகுதியுள்ள அரசு துறையில் ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும். ஓய்வுபெறும் நாளன்று செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமலயே ஊதியத்தை சிலர் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் அரசிடம் வைக்கப்பட்டுள்ளன. இதனால் செயற்கை காலிப்பணியிடங்களை ஏற்படுத்துதலை தவிர்க்க வேண்டும். தற்காலிக பதவி உயர்வு வழங்குதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

