சமூகம்சினிமாவெள்ளித்திரை

நயன்தாரா படத்திற்கு மறுப்பு : திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி!

நயன்தாரா படம்

‘மாயா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இதில் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அண்மையில் இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதனிடையே இந்த படம் மொத்தம் 99 நிமிடங்கள் இடைவேளை இல்லாமல் ஓடும் என அறிவிக்கப்பட்டது.

மறுப்பு

இந்நிலையில், ‘கனெக்ட்’ படத்தை இடைவேளை இல்லாமல் வெளியிட தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஸ்ரீதர் மறுப்பு தெரிவித்துள்ளார். இடைவேளையில் ரசிகர்கள் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்களை வாங்குவது குறிப்பிடத்தக்கது.

Related posts