வீட்டு விசேஷம்
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறியப்பட்டவர் அட்லீ. அதனையடுத்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியதின் மூலம் பிரபலமானார். இதன் வெற்றியை தொடர்ந்து அட்லீ தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் என்ற ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா கர்ப்பமாக உள்ளதாக சமீபத்தில் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், பிரியாவின் வளைகாப்பு விசேஷத்தில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளது தற்போது இணையத்தில் பேசும் பொருளாகியுள்ளது. மேலும், இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

