சினிமாவெள்ளித்திரை

அம்மா பாடலை வெளியிட்ட வாரிசு படக்குழு!

மூன்றாவது பாடல்

தளபதி விஜய் நடிப்பில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, ஷாம், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே இப்படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு என்ற பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இப்பாடலின் ப்ரோமோ வீடியோவும் இன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் ‘சோல் ஆஃப் வாரிசு’ எனும் அம்மா பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts