பிரபல நடிகை
80-களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் கடைசியாக 2015-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்தில் நடித்திருந்தார். இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் தடக், கோஸ்ட் ஸ்டோரீஸ், குட் லக் ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
காதல் வலை
இந்நிலையில், மராட்டிய முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரன் ஷிகர் பஹாரியும், நடிகை ஜான்வி கபூரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இருவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

