சினிமாவெள்ளித்திரை

அடுத்தடுத்து சாதனை படைக்கும் விஜய் பட பாடல்கள்!

விஜய் பட பாடல்

நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இதில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் மற்றும் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இதனிடையே இந்த படத்தின் மூன்றாவது பாடலான ‘சோல் ஆஃப் வாரிசு’ என்ற பாடல் இன்று மாலை வெளியிடப்பட்டது. அம்மா பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

யூடியூபில் சாதனை 

இந்நிலையில், ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. மேலும், ‘வாரிசு’ படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ சமீபத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related posts