புனேவை சேர்ந்த கணவன் ஒருவர் தனது மனைவியை பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு
மகாராஷ்டிரா, புனேவை சேர்ந்த பெண் ஒருவரை 2013ல் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2013ம் ஆண்டு முதல், வரதட்சணை கேட்டும், தனக்கு ஆண் குழந்தை பிறக்காததற்காகவும் மாமியார் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக கூறியுள்ளார். தொடர்ந்து கணவர் பல சாமியார்கள் சொல்வதை கேட்டு சில சடங்குகளைச் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், அவரது கணவருக்கு கோலாப்பூரைச் சேர்ந்த ஒரு மவுலானாவுடன் தொடர்பு ஏற்பட்டது. பெண்ணின் கணவர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக மவுலானாவிடம் அழைத்துச் சென்று மனைவிக்கு சூனியம் போன்ற மாந்திரீக பரிகாரங்களை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மவுலானாவின் மந்திரக்கத்தாலும் மற்றும் உடன்பிறந்தவர்களின் ஆலோசனைப்படி மனைவியை பொதுவெளியில் ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் நிர்வாணமாக குளிக்கச் செய்தால் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், அந்த பெண் ராய்காட் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பெண்ணை முழு நிர்வாணமாக பொது மக்கள் முன்னிலையில் குளிக்க வற்புறுத்தினர். இதனையடுத்து அந்த பெண் போலீசில் புகாரளித்துள்ளார். அந்த பெண்ணின் கணவர், மாமியார், கணவரின் உடன்பிறந்தவர்கள் ,மவுலானா பாபா ஜமாதர் என்ற மந்திரீகவாதி உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் புனே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.