அரசியல்இந்தியாகல்விசமூகம்

கல்வியாளர்கள் தேசிய கல்விக் கொள்கை குறித்து படிக்க வேண்டும் – உள்துறை அமைச்சர் !

கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைவரும் தேசிய கல்விக் கொள்கை குறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

உள்துறை அமைச்சர்

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் இந்தியாவின் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘தேசிய கல்விக் கொள்கை, பொதுமக்களின் ஆசைகளை பிரதிபலிக்கிறது. இதற்கு முந்தைய கல்விக் கொள்கை ஒரு மாணவரை வெற்றிகரமான நிபுணராக மாற்ற உருவாக்கப்பட்டது. ஆனால் புதிய கல்விக் கொள்கை ஒரு மாணவனை சிறந்த மனிதனை உருவாக்கும், அது மட்டும் அல்லாமல் இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும். ஒரு நாடு என்பது விவசாயம், ஆறுகள் அல்லது மலைகளால் மட்டுமே சிறந்த நாடாக உருவாகாது.

இந்திய நாடு சிறந்த நிலையை அடைய சிறந்த ஆளுமைகள் தேவைப்படுகிறது. ஆங்கிலம் இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மையை வளர்த்துள்ளது. புதிய கல்விக் கொள்கையில் இந்திய கலைகள், கலாச்சாரம், தாய்மொழி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களையும் நிச்சயம் இது ஈர்க்கும். கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைவரும் தேசிய கல்விக் கொள்கை குறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும்’ என கருத்தரங்கில் கூறியுள்ளார்.

Related posts