அரசியல்இந்தியாதமிழ்நாடு

புதுச்சேரி : ‘நாராயணசாமியை கட்சியைவிட்டு தள்ளி வையுங்கள்’ – ராகுல் காந்திக்கு கடிதம் எழுதிய தொண்டர்கள் !

நாராயணசாமியை கட்சியைவிட்டு தள்ளி வைக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

ராகுல் காந்திக்கு தொண்டர்கள் கடிதம் 

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது காங்கிரஸ் கட்சி. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் கட்சியையும், நிர்வாகிகளையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியிலிருக்கும் 42 நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தில், `புதுச்சேரி காங்கிரஸ் மண். ஆனால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்று தொண்டர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டுமென்றால் மாநில தலைவரை மாற்ற வேண்டும். அந்த புகார் கடிதத்தில் புதுச்சேரி காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் செயலாளர்கள் நிர்வாகிகள் என 42 பேர் கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளனர். அதில் மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் நம்பிக்கை இழந்துள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமியையும் புதுச்சேரி அரசியலிலிருந்து தள்ளி வைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts