சென்னை வளசரவாக்கத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவர் கேமரா பொருத்தி கண்காணிப்பதாக பெண் என்ஜினீயர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பெண் என்ஜினீயர்
சென்னை வளசரவாக்கம், ஓம் சக்திநகரை பகுதியை சேர்ந்தவர் சந்தியா (34). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், அவர் 2011ம் ஆண்டு வடபழனியை சேர்ந்த சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் . அதன் பிறகு சஞ்சய் உடனான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அவர் தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சஞ்சய், எனது வீட்டின் எதிர்புறம் கண்காணிப்பு கேமராவை பொருத்தியும், எனது வாகனத்தில் ஜி.பி.ஆர்.எஸ். கருவியை பொருத்தியும் என்னை கண்காணிப்பதோடு, அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களை அனுப்பி என்னை மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

