இந்தியாசமூகம் - வாழ்க்கைசுற்றுசூழல்

உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு தலை வணங்குகிறேன் – ஜனாதிபதி முர்மு !

‘நாட்டை காக்க உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்’ என ஜனாதிபதி திரவுபதி முர்மு பதிவிட்டுள்ளார்.

கார்கில் தினம்

இந்திய லடாக்கில் உள்ள கார்கில் எல்லை பகுதியில் இருந்த இந்தியப் பகுதியில் உள்ள மலை உச்சியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தான் ராணுவ படைகளை எதிர்த்து போரிட்டு 1999 ஜூலை 26ம் ஆண்டு இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நினைவுகூரும் வகையிலும், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையிலும், கார்கில் விஜய் திவாஸ் தினம் என ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி இந்தியா அரசால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பதில், ‘கார்கில் விஜய் திவாஸ் நமது ராணுவத்தின் வீரத்திற்கான சின்னம். நாட்டை காக்க உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நாட்டு மக்கள் அனைவரும் எப்போதும் கடமைப்பட்டிருப்பார்கள்’ என கூறியுள்ளார்.

Related posts