சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் பிரதீப் ரங்கநாதனின் ட்விட்டர் பதிவு!

2019-ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ அண்மையில் திரையரங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இதில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. தமிழின் வெற்றியை தொடர்ந்து இப்படம் சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியானது.

இந்நிலையில், ‘லவ் டுடே’ தலைப்பை முதலில் வைத்த இயக்குனர் பாலசேகரனுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts