நாளை சென்னை மாகரின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தாம்பரம் பகுதி
தாம்பரம் பகுதியில் உள்ள கோவிலம்பாக்கம் வடிவேல் நகர், கோபால் நகர், விஜயலஷ்மி நகர், இந்திரா நகர் ,செம்பாக்கம் ,மாடம்பாக்கம் மெயின் ரோடு, சுதர்சன் நகர், ஸ்ரீதேவி நகர், அம்பிகா நகர், பெருங்களத்தூர் காந்தி ரோடு, கட்டபொம்மன் தெரு, ராஜீவ் காந்தி தெரு, காமராஜர் நகர், ராகவேந்திரா நகர் விஜிபி பிரபு நகர், வீராத்தம்மன் கோவில் தெரு, ஜகன்நாதபுரம், மடிப்பாக்கம் 200 அடி ரோடு, மேடவாக்கம் மெயின் ரோடு, துரைசாமி தெரு, தர்மராஜா கோவில் தெரு, அன்பு நகர், சரஸ்வதி தெரு, பாலமுருகன் தெரு, சுப்பிரமணி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தண்டையார்பேட்டை, வியாசர்பாடி
தண்டையார்பேட்டையில் உள்ள சாத்தங்காடு காமராஜ் சாலை, பாடசாலை, ராமசாமி நகர், ராஜாஜி நகர், ஜெயலலிதா நகர், பெரியார் நகர், ஜெயபால் நகர், பெருமாள் கோவில் தெரு, காடபாக்கம். டோல்கேட் பொன்னுசாமி தெரு, சுடலைமுத்து தெரு, கோவிந்தராஜ் தெரு, வீரராகவன் ரோடு. வியாசர்பாடி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை, ரவி கார்டன், மேத்தா கார்டன், பழனியப்பா நகர், கண்ணபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தி.நகர், கே.கே நகர்
தி நகர் பகுதியில் உள்ள அஜிஸ் தெரு, தெற்கு தண்டபாணி தெரு, ராமநாதன் தெரு, ராமேஸ்வரம் சாலை, டெம்பில் டவர், மாடல் அட்மெண்ட சாலை முதல் தெருவிலிருந்து 6வது குறுக்கு தெரு வரை, அப்துல் கிவிராஜ் கட்டடம் மேற்கு மாம்பலம் நரசிம்மன் தெரு. கே.கே நகர் பகுதியில் உள்ள வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம். கே.கே. நகர் பகுதியில் உள்ள அசோக்நகர், வடபழனி, அழகிரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி: ராஜ்பவன், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, டிஜிநகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை. போரூர் பகுதியில் மகாலட்சுமி நகர், மைக்ரோ எஸ்டேட், பெருமாள் நகர், அருணகிரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறவிருப்பதால் மேற்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சவுதியில் அரசுக்கு எதிரான பெண்ணுக்கு சிறை தண்டனை !