சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் ‘பொய் இன்றி அமையாது உலகு’ பட டிரைலர்!

வைரலாகும் டிரைலர்

இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் செல்போனை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் ‘பொய் இன்றி அமையாது உலகு’. இதில் விவேக் பிரசன்னா, நடிகை சாக்ஷி அகர்வால் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, டேனியல் ஆனி போப், அர்ஜுன், பிரவீண், ஸ்வயம்சித்தா, சஹானா, ஜமுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வசந்த் இசையமைக்க, பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், தியா சினி கிரியேசன்ஸ் மற்றும் ரூல்ஸ் பிரேக்கர்ஸ் புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இதன் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘பொய் இன்றி அமையாது உலகு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Related posts