செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள சென்னைக்கு வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் வருகை
செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது இதில் கலந்துகொள்வதற்கும், 29ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கும் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் சென்னை வருகிறார். இதனால் சென்னையில் 22 ஆயிரம் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் .
இதன்பெயரில் நேரு உள் விளையாட்டு அரங்கு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் முழுவதுமாய் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. மேலும், பிரதமர் மோடியின் வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

