உலகம்சமூகம்சுற்றுசூழல்

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் – வீதியில் மக்கள் தஞ்சம் !

பிலிப்பைன்சில் மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்

பிலிப்பைன்சின் அப்ரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல் பிலிப்பைன்சில் கடந்த 1990ம் ஆண்டு 7.7 என பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts