Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அறிவியல்»பிளாட்டிபஸ் – விளங்க முடியா விலங்கினம் நான்!!!

பிளாட்டிபஸ் – விளங்க முடியா விலங்கினம் நான்!!!

March 30, 20222 Mins Read139 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வாத்தைப் போல தட்டையான அலகு,சவ்வினால் இணைந்த கால்விரல்கள்,தட்டையான வாலும், உடலில் தோலும் ரோமமும் உண்டு ,முட்டை இடும், ஆனால் பாலூட்டி வகையை சார்ந்தது .

இப்படி பல விலங்குகளின் கலவையாக வாழும் ஒரு உயிரினம் தான் பிளாட்டிபஸ் (Platypus) எனப்படும் “வாத்தலகி”. எலிகளைப் போல மண்ணுக்குள் வளை பறித்து வாழும், மீன்களைப் போல் தண்ணீரில் மணிக்கணக்காக நீந்தி உணவுதேடும், பாம்பின் முட்டையைப் போல் மெல்லிய தோல் கொண்ட முட்டை இட்டு, பறவைகளைப் போல் அடைகாத்து, குட்டிகளுக்கு பாலூட்டும் பாலூட்டி வகையைச் சேர்ந்தது.
இப்படியும் ஒரு விலங்கா என்று நீங்கள் ஆச்சர்யப்படுகிறீர்களா? இப்படி தான் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆராய்ச்சியாளர்களும் வியந்தனர்.

1798- இல் தான் முதன்முதலாக இப்படியொரு உயிரினம் இருப்பது உலகுக்குத் தெரியவந்தது. பாலூட்டிகளில் மோனோட்ரீம்ஸ் (Monotremes) என்னும் வகையைச் சார்ந்தது பிளாட்டிபஸ் . Monotremes என்றால், ஒரு துவாரத்தை மட்டுமே பயன்படுத்தும் விலங்குகள் என்று பொருள். அதாவது கழிவுகள் வெளியேற்றவும், இனப்பெருக்கம் செய்யவும் ஒரே உடல் துவாரத்தை பயன்படுத்தும் விலங்குகள் தான் இந்த Monotremes வகையை சாரும்.

இதையும் படிக்க :  கூகுள் வகுப்பறை பற்றித் தெரிந்துகொள்வோம் வாருங்கள்

பிளாட்டிபஸ் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் தாஸ்மேனியாவில் பரவலாகக் காணப்படுகின்றன. ஏரி மற்றும் ஆற்றுப்படுகைகளில் வளை தோண்டி வசிக்கும் இவை Nocturnal Animals எனப்படும் இரவு விலங்குகள். இரவுநேரம் முழுவதையும் நீரில் நீந்தியபடி உணவு உண்ணுவதிலேயே கழிக்கின்றன. நீருக்கடியில் வாழும் இறால்வகைகள், லார்வாக்கள், புழுக்கள், பூச்சிகள் போன்றவையே இவற்றின் உணவுகளாகும்.

பிளாட்டிபஸ்ஸின் ஆயுட்காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். பிளாட்டிபஸ் வித்தியாசமாக குட்டிகளுக்கு பால் கொடுக்கின்றன. இவற்றுக்கு பாலூட்டும் மார்பக காம்புகள் கிடையாது. தாயின் மார்பிலிருக்கும் சுரப்பியிலிருந்து தோல்துவாரங்கள் வழியே கசிந்து வெளியேறும் பாலை குட்டிகள் நக்கி குடிக்கும்.

இதையும் படிக்க :  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாழ்க்கை வரலாறு

ஆண் பிளாட்டிபஸ்ஸின் பின்னங்கால்களில் ஒரு விஷமுள் உள்ளது. இதன் விஷம் ஒரு நாயைக் கொல்லும் அளவுக்கு வீரியமுள்ளது. இனப்பெருக்க காலத்தில் பிற ஆண் பிளாட்டிபஸ்களை எதிர்கொள்ளவும், எதிரியைக் கொல்லவும் இவை இந்த நச்சுமுள்ளைப் பயன்படுத்துகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோலுக்காவும் ரோமத்துக்காகவும் இவை பெருமளவில் வேட்டையாடப்பட்டுவந்தன. ஆனால் இப்போது கடுமையான சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்ட சில உயிரியல் பூங்காக்களில் காட்சிக்காகவும், சில பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிக்காகவும் வனத்துறையின் அனுமதியுடன் பேணப்படுகின்றன. ஆஸ்திரேலிய சட்டம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிளாட்டிபஸ்ஸை பிறநாடுகளுக்கு எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கிறது. ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களுடைய பாரம்பரியக் கதைகளிலும் பிளாட்டிபஸ் இடம்பெற்றுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை நீரெலிக்கும் வாத்துக்கும் பிறந்த பிள்ளைதான் பிளாட்டிபஸ்.

australia monotremes platypus
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleராஜகண்ணப்பனை அமைச்சரவையிலிருந்து நீக்குக – சீமான் அறிக்கை!
Next Article வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து ; உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

Related Posts

அறிவியல்

“மக்களை ஏமாற்றிய திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது” – பழனிசாமி ஆவேசம்

March 9, 2026
Editor's Picks

ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெகவுடன் எங்களை ஒப்பிடக்கூடாது – நயினார் நாகேந்திரன்

November 27, 2025
Editor's Picks

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 5ம் தலைமுறை போர் விமானம்

November 24, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,045 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,989 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,045 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,989 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.