Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு

March 12, 2026

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, March 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ராஜகண்ணப்பனை அமைச்சரவையிலிருந்து நீக்குக – சீமான் அறிக்கை!

ராஜகண்ணப்பனை அமைச்சரவையிலிருந்து நீக்குக – சீமான் அறிக்கை!

March 30, 20222 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் சாதி ரீதியாக இழிவுபடுத்தியாக புகார் கிளம்பிய நிலையில், ராஜகண்ணப்பனிடமிருந்து போக்குவரத்து துறை மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அறிக்கை விடுத்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசு அதிகாரியை சாதி ரீதியாக அவமதித்த ராஜகண்ணப்பனை அமைச்சரவையிலிருந்து நீக்கிட வேண்டுமெனவும், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தன்னை சாதிரீதியாக இழித்துரைத்து, பலமுறை அவமதித்ததாக தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் புகாரளித்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சாதி, மதம் என எதன்பொருட்டும், எவர் மீதும் எவ்விதப்பாகுபாடும் காட்டமாட்டேனெனப் பதவியேற்பு உறுதிமொழி எடுத்த அமைச்சரே, சாதியக்கண்ணோட்டத்தோடு அதிகாரியை அவமரியாதை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இதையும் படிக்க :  தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழா அறிவிப்பு !

‘அரசியல் மாச்சர்யங்களை ஆட்சி நிர்வாகத்தில் ஒருபோதும் காட்டக்கூடாது’ என்றார் அறிஞர் அண்ணா. அரசியல் நிலைப்பாட்டையே ஆட்சியதிகாரத்தில் செலுத்தக்கூடாது என முழங்கியவரின் வழிவந்த கட்சியின் அமைச்சரவையிலேயே, இன்றைக்கு சாதிய ஆதிக்க மனநிலை நிலவுவதும், சமூக நீதியெனப்பேசும் கட்சியின் ஆட்சியில் அமைச்சரே, சாதியத்துவேசத்தோடு நடந்துகொள்வதுமானப் போக்குகள் வெட்கக்கேடானது.

‘திமுகவினரே தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என அறிஞர் அண்ணா மீது சத்தியமிட்டு முழங்கிய தமிழகத்தின் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் சாதிய மனநிலையோடு அவமதித்ததற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காது, துறைரீதியாக இடமாற்றம் செய்ததோடு நிறுத்திக்கொண்டது ஏமாற்றமளிக்கிறது.

இதையும் படிக்க :  அமைச்சர் மீது நடவடிக்கை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு !

அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்துத்துறையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்குத் துறைமாற்றம் செய்யப்படுவது என்பது எதிர்ப்பின் வீரியத்தைக் குறைத்து மடைமாற்றம் செய்யும் யுக்திதானே ஒழிய, தவறுக்கான உகந்த நடவடிக்கையல்ல.

ஆகவே, அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்ய முன்வர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதியக்கண்ணோட்டத்தோடு அரசு அதிகாரியை அவமரியாதை செய்திருக்கும் அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து, அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!

– #சீமான் வலியுறுத்தல் https://t.co/mNnpfgLpnx @CMOTamilnadu | @mkstalin pic.twitter.com/StTltLTabd

— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) March 30, 2022

rajakannappan Seeman
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉப்பு வாங்கலையோ உப்பே!!! – உப்பின் வணிக வரலாறு ஒரு சிறு பார்வை
Next Article பிளாட்டிபஸ் – விளங்க முடியா விலங்கினம் நான்!!!

Related Posts

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு

March 12, 2026
தமிழ்நாடு

தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது! நயினார் நாகேந்திரன் ட்வீட்

March 12, 2026
தமிழ்நாடு

இன்று நகை வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் அதிரடி சரிவு

March 12, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Our Picks

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு

March 12, 2026

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.