வணிகம்

மிளகு – காரைக்குடியிலிருந்து காரசாரமாய் ஒரு வணிகப்பயணம் !

மிளகு என்பது நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒன்றாக இருந்தாலும் பண்டைய காலத்தில் தங்கத்தை விட விலைமதிப்பற்ற ஒரு பொக்கிஷமாகவே பார்க்கப்பட்டது. சங்க இலக்கிய நூல்களில் கூட மிளகு பற்றிய குறிப்புகள் இருப்பது, இதன் தொன்மையை பறைசாற்றும் எடுத்துக்காட்டுகளாகும்.

தென்னிந்தியாவில், குறிப்பாக இன்றைய தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக அதிகம் விளைவிக்கப்பட்டது மிளகு தான். தென்னிந்தியாவில் விளைந்த மிளகானது மரக்கப்பல்களில் ஏற்றப்பட்டு உலகம் முழுமைக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. `

பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தர பாண்டியன் எனும் பாண்டிய மன்னன், தன்னுடைய ஆட்சியின் கீழ் இருந்த நிலப்பரப்புகளில் விளைந்த மிளகு சீரகம் ஏலக்காய் போன்றவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய, வணிகத்தில் காய் தேர்ந்தவர்களை நியமித்தான்.

தமிழகத்தில் உள்ள காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விளைந்த மிளகானது, கேரளப்பகுதியில் உள்ள மலபார் வழியாக பயணித்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கும், வங்க கடல் வழியாக சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

இப்படி மிளகு வணிகம் செய்ய சென்றவர்கள் பலரும் அந்த தொழிலில் அதிக அளவு வருமானத்தை ஈட்டினர். மிளகுத்தொழிலில் நிறைய லாபமடைந்த இவர்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தை வைத்து, காரைக்குடியில் மாளிகை போன்ற வீடுகளை கட்டினர். இன்றளவும், காரைக்குடியில் இவ்ரகள் கட்டிய அரண்மனை வீடுகள் , தங்களின் கம்பீரம் குறையாமல், அழகாக காட்சியளித்து, உலக வர்த்தகத்தில் தமிழகத்தின் பங்கினை எடுத்துரைக்கின்றன.

இன்றைய நவீன காலகட்டத்தில் கூட, தமிழகம் மற்றும் கேரள ஆகிய இரண்டு மாநிலங்களும், மிளகு விவசாயத்தில் நிறையவே வருமானம் ஈட்டி வருகின்றன. குறைந்த விலைக்கு விவசாய நிலங்களை வாங்கியோ, குறுகிய காலத்திற்கு குத்தகை எடுத்த்தோ, பல வணிகர்கள் மிளகு விவசாயத்தை இன்றும் செய்து வருகின்றனர்.

குறைந்த கூலி, கடினமில்லாத வணிக வரிகள், தொடர்ந்து அதிகரிக்கும் உலக வர்த்தக தேவைகள், என பல காரணிகள் மிளகு வியாபாரத்திற்கு ஏதுவாக அமைந்திருப்பதால், எக்காலத்திலும் மிளகு விவசாயம் லாபம் ஈட்டும் தொழிலாகவே அமைகிறது.

Related posts