திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவி தற்கொலை
திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம் மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா (17). இவர் கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்லசெல்ல புறப்பட மாணவி சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர் போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து அறிந்த திருவள்ளூர் துணை நிலைய சூப்பிரண்ட் சந்திரதாசன், துணை ஆய்வாளர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர், விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

