நாட்டுமக்களின் நம்பிக்கையும், ஆதரவும் இந்த பொறுப்பை மேற்கொள்ள எனக்கு வலிமை அளிக்கும் என புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
பதவியேற்பு
இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். திரவுபதி முர்முவுக்குஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் திரவுபதி முர்மு நாடளுமன்ற சபையில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் நிற்பது என்பது அனைத்து இந்தியர்களின் எதிர்பார்ப்பு, லட்சியம், உரிமை. அனைவருக்கும் எனது பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளநாட்டுமக்களின் நம்பிக்கையும், ஆதரவும் எனக்கு மிகுந்த வலிமையை கொடுத்திருக்கிறது. இந்திய நாடு சுதந்திர அடைந்த பின்னர் பிறந்த முதல் ஜனாதிபதி நான் தான். சுதந்திர இந்தியாவின் குடிமக்கள் மீது சுதந்திர போராட்ட வீரர்கள் கொண்ட நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாம் வேகமாக செயல்படவேண்டும். ஜனாதிபதி பதவியை அடைவது எனது தனிப்பட்ட சாதனையல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழைகளின் சாதனை இது. எனது ஜனாதிபதி நியமனம் இந்தியாவில் உள்ள ஏழைகள் கனவுகளை மட்டும் காண்பதுமட்டுமல்லாமல் அந்த கனவுகள் நிறைவேறும் என்பதற்கு ஆதாரமாக நான் விளங்குகிறேன்.
இந்திய நாட்டில் வளர்ச்சி இல்லாமல் உள்ள ஏழைகள், பட்டியலினமக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் என்னை அவர்களின்ஒருவராக பார்ப்பது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. நான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது பின்னால் ஏழைகளின் ஆசீர்வாதம் உள்ளது. எனது குடியரசுத்தலைவர் பொறுப்பு, ஏழைகள், பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும். நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். பழங்குடியினத்தைச் சேர்ந்த நான் குடியரசுத் தலைவரானது ஜனநாயகத்தின் தாயகமாக வழங்கும் இந்தியாவின் தனி சிறப்பு. ஒரு சிறிய கிராமத்தில் இருந்து பயணத்தை தொடங்கினேன். பழங்குடினர்கள் கனவும் நினைவாகும் என்பதற்கு நானே உதாரணம் நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். அனைவருக்கமான ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்க முனைப்புடன் செயல்படுவோம்.
இதனை தொடர்ந்து நாட்டின் 15 வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்று கொண்டுள்ளதை நாட்டில் உள்ள பல தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

