ஜனாதிபதி மாளிகைக்கு வந்த திரவுபதி முர்முவை ராம்நாத் கோவிந்த் வரவேற்றார்.
ஜனாதிபதி மாளிகை
இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியா ககடந்த 18ம் தேதிநடந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். நாட்டில் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதியாகவும், நாட்டின் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்முபெற்றுள்ளார். புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்கிறார். டெல்லி நாடாளுமன்ற அலுவலக மண்டபத்தில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா இன்று காலை 10.15 மணிக்கு நடைபெற்று வருகின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்முவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற அவரை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள திரவுபதி முர்முவுவை ராம்நாத் கோவிந்த் இன்று மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் இருவரும் நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டு சென்றனர். நாடாளுமன்ற மைய வளாகத்தில்உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா திரவுபதி முர்வுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

