சித்தராமையா கார் மீது முட்டைகள் வீசியும், எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டியும் மக்கள் போராட்டம் செய்தனர்.
மக்கள் எதிர்ப்பு
கர்நாடகாவில் பெய்த கனமழையால் மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர். குடகு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட சென்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் . அப்போது, சாவர்க்கரை பற்றி சித்தராமையா அவதூறாக பேசியதாக கூறி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவருக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அதில் ஒரு சிலர் அவருடைய கார் மீது முட்டையை வீசினர். எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரசாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், குடகு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.