தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராமதாஸ் எச்சரிக்கை
அதில், ‘தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்து வருகிறது. அதனால் மின்சார சந்தையிலும் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழ்நாட்டில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்க்கை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் பாதிப்படையும். உடனடியாக மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை செலுத்தி தடையை விலக்கச் செய்ய வேண்டும்.
மேலும், தமிழகத்தில் மின்தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். பொதுமக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இது பாதிக்கக் கூடும்!(3/4)#PowerCut
— Dr S RAMADOSS (@drramadoss) August 19, 2022

