பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தி.மு.க.வுக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
குற்றச்சாட்டு
பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை சென்ற பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தி.மு.க. கூத்து பட்டறையாக மாறிவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் போதை ஒழிப்பு குறித்து தினமும் பேட்டி அளிக்கிறார். ஆனால் , வரலாற்றிலேயே அதிகளவில் கடந்த 14-ம் தேதி மது விற்பனையாகியுள்ளது.
குடும்ப ஆட்சியால் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் கூட்டணி வைக்க எந்த ஒரு தகுதியும் இல்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க ஊழலற்ற நல்லாட்சியாக இருக்க வேண்டும்.

