நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி மும்மை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
15 -வது சீசனின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் மும்பை மற்றும் புனேவில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 14 -வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த மும்மை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்மை பேட்டிங்
மும்பை அணி 15 -வது ஐபிஎல் சீசனில் தனது முதல் வெற்றியை பெரும் முனைப்பில் களம் இறங்கியது. மும்மை அணிக்கு தொடக்கமே போட்டியின் முடிவை தீர்மானிக்கும் விதமாக அமைந்தது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 3 ரன் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவிடம் தன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ரோஹித்தின் இடத்தை நிரப்பும் பொருட்டு தென்னாப்பிரிக்காவின் இளம் மட்டைவீச்சாளரான ட்ரேவில் களம் இறங்கினார்.கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நான்கு திசைகளிலும் பறக்கவிட்டார். அணியின் ரன்னும் உயர்ந்தது. மும்மை அணி அடுத்தடுத்து இஷான் மற்றும் ட்ரேவில் விக்கெட்டை இழந்து தருமாறியதால் அணியின் ரன் வேட்டையை அதிகப்படுதும் நோக்கில் இந்த சீசனின் தனது முதல் போட்டியில் சூரியகுமார் யாதவ் களம் கண்டார்.
அதிரடியாக ஆடிய சூரியகுமார் யாதவ் அரை சதம் அடித்து 52 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக ஒருபுறம் திலக் வர்மா 38 ரன்கள் எடுத்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா சார்பில் கம்மின்ஸ் மற்றும் உமேஷ் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
கொல்கத்தா அணி
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் மற்றும் ரஹேனா களம் இறங்கினர். கொல்கத்தா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைத்தது. ரஹேனா 5 -வது ஓவரில் டைமல் மில்ஸிடம் தன் விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரிலையே கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸின் விக்கெட்டை டானியல் சாம்ஸ் வீழ்த்தினார்.
கொல்கத்தா அணி பவர் பிலேயில் 35 – 2 என்ற நிலையில் தடுமாறியது. வெங்கடேஷ் ஐயர் மற்றும் சாம் பில்லிங்ஸ் பேட்டிங் அணிக்கு நம்மிக்கை தந்தது.கொல்கத்தா அணி, மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே இக்கட்டான நிலைக்கு சென்றது. புதிய பேட்டரான கம்மின்ஸ் அதிரடியாக தன் ஆட்டத்ததை தொடங்கினர்.மறுபக்கத்தில் நிதானமாக ஆடிய வெங்கடேஷ் அரைசதம் விளாசினார்.
5 ஓவர்க்கு 35 ரன்கள் தேவை என்ற நிலையில் 15 -வது ஓவரை சாம்ஸ் வீசினர் அந்த ஓவரில் 4 சிஸ்சர்கள் 2 பௌண்டரி அடித்து 4 ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையிலையே வெற்றி வாகை சூடியது கொல்கத்தா அணி. பேட் கம்மின்ஸ் 14 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். மும்பை அணியில் அதிகபச்சமாக முருகன் அஸ்வின் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
இன்று நடக்கும் போட்டியில் சமபலம் வாய்ந்த KL ராகுலின் லக்னோ அணியும் ரிஷப் பண்ட்டின் டெல்லி அணியும் மோதுகின்றன.