உலகம்சமூகம்

உலக சுகாதார தினமும்.. நாம் தெறிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளும்!

உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய அளவில் மக்களிடம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

சுகாதார பணியாளர்களின் கல்வி, பயிற்சி, சம்பளம், பணிச்சூழல் மற்றும் மேலாண்மையை கருத்தில் கொண்டு உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. குறைவான முதலீட்டின் காரணமாக சுகாதார பணியாளர்களின் நெருக்கடியை நினைவில் வைத்து, உலகெங்கிலும் உள்ள சுகாதார ஊழியர்களின் நீண்டகால பற்றாக்குறைக்கு இந்நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. சுகாதார பணியாளர்களை வேறுவிதமாகக் கூறினால் சுகாதார அமைப்புகளின் இதயம் எனலாம்.

சுகாதார பணியாளர்களின் மீது கவனம் செலுத்திய WHO இன் உலக சுகாதார அறிக்கை 2006 இன் வெளியீட்டையும், இந்த நாள் குறிக்கின்றது. உலகளாவிய சுகாதாரப் பணியாளர்களின் தற்போதைய நெருக்கடியின் மதிப்பீட்டை இந்த அறிக்கை கொண்டுள்ளது. உலகளவில் கிட்டத்தட்ட 4.3 மில்லியன் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பாதுகாப்பு பணியாளர்களின் பற்றாக்குறையை இந்த அறிக்கை வெளிப்படுத்தியது.

உலக சுகாதார தினம் பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் பொது சுகாதார பிரச்சனைகளில் ஆர்வமுள்ள அரசு சாரா நிறுவனங்களால் அங்கிகரிக்கபட்டு கொண்டாடப்படுகிறது. அவர்களின் செயல்பாடுகளை ஒழுங்கமைத்து உலகளாவிய சுகாதார கவுன்சில் போன்ற நிறுவனங்கள் அறிக்கைகளில் தங்கள் ஆதரவை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.

நாமும் உலக சுகாதார தினத்தைக் கொண்டாடுவோம். நம் அருகில் உள்ள சுகாதார பணியாளர்களை பாராட்டும் விதமாக நன்றி தெரிவிப்போம்.

Related posts