சினிமா

தியேட்டர்களை சாகடிக்கும் தொழில்நுட்பம்; OTT யில் வாழக் கத்துக்கொடுக்கிறதா உலகம்!

தியேட்டரில் படங்களை ரிலீஸ் செய்வதற்கு இருக்கும் சிக்கல்களை சரிசெய்வதற்காக ஓடிடி தளம் உருவாகி, நிறைய சிறு முதலீட்டுப் படங்களும், ஸ்டார் நடிகர்களின் படங்களும் ஓடிடியில் வெளியிடப்பட்டு வெற்றியடைந்து வருகிறது. இந்நிலையில் ஓடிடி யை பழைய கதையாக்கும் வகையில் சொந்தமாக ஓடிடி தளங்களை தொடங்க ஆரமித்திருக்கின்றனர் நடிகர்கள்.

பல முன்னணி நடிகர்கள் ஓடிடி பிசினஸில் குதித்து வருகையில், பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானும் இந்த ஓடிடி தளத்தில் களமிறங்குகிறார். தனது புதிய ஓடிடி நிறுவனமான SRK+ விரைவில் வரப் போவதாக அவர் செய்திருக்கும் ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

ஆஹா ஓடிடி
நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கில் ஆரம்பித்த ஆஹா ஓடிடி தமிழிலும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆஹா ஓடிடியை தனது தந்தை அல்லு அரவிந்த் பெயரில் நடத்தி வருவதாக அல்லு அர்ஜுன் கூறுகிறார். தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் ஓடிடியில் ஆகாசவாணி, ரைட்டர், மிக மிக அவசரம் என ஏகப்பட்ட அருமையான படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Clean OTT

 


பிரபல பாலிவுட் நடிகையாக இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியானவர் அனுஷ்கா ஷர்மா. இவர் 2023ம் ஆண்டு தொடக்கத்தில் Clean OTT எனும் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளார். இதில் பெண்கள் சார்ந்த படங்களும், வெப் தொடர்களும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதேபோல் எக்கச்சக்கமான நடிகர்கள் ஓடிடி வியாபாரத்தில் கால்பதித்து வருகின்றனர்.

SRK+ ஓடிடி
இதுவரை ஷாருக்கான் நடித்த படங்கள் எதுவுமே நேரடியாக ஓடிடியில் வெளியாகாத நிலையில், புதிதாக ஓடிடி நிறுவனத்தையே தொடங்கிவிட்டார் ஷாருக்கான். SRK+ என பெயரிடப்பட்டுள்ள அந்த ஓடிடி தளம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த ட்வீட் ஷாருக்கான் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஓடிடி வியாபாரத்தில் உச்சத்தில் இருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா சூழலை பயன்படுத்தி பெரியளவில் வெற்றியடைந்தனர். இவர்களை பின்பற்றி முன்னணி நடிகர்களும் நடிகைகளும் ஓடிடி நிறுவனங்களை தொடங்கி வருகின்றனர்.

 

 

Related posts