சினிமாவெள்ளித்திரை

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிரபல நடிகர்!

மருத்துவமனையில் அனுமதி

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கி வரும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இதுமட்டுமின்றி அவ்வப்போது கட்சி பணியிலும் ஈடுப்பட்டு வருகிறார். இயக்குனர் விஸ்வநாத்தை சந்திக்க ஐதராபாத் சென்ற இவர் நேற்று சென்னை திரும்பினார். இதனிடையே நேற்று இரவு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தற்போது நலமாக உள்ளார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2 நாட்களுக்கு ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை அவர் வீடு திரும்பினார்.

Related posts