இந்தியாசமூகம்

கிரிப்டோ பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்ட யூபிஐ பேமெண்ட் (UPI) ஆப்சனை நிறுத்திய NPCI!

கடந்த ஒரு மாத காலமாகவே கிரிப்டோ பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்ட யூபிஐ பேமெண்ட் (UPI) ஆப்சனை என்பிசிஐ (National Payments Corporation of India) நிறுத்தி வைத்துள்ளது. இதனால் கிரிப்டோ வர்த்தக நிறுவனங்கள் உட்பட முதலீட்டாளர்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

சமீபத்தில் என்பிசிஐ மற்றும் அதன் பங்குதாரர் வங்கிகளுடன் நடந்த கூட்டம் ஒன்றில், வங்கிகள் கிரிப்டோகரன்சி மீதான நிழல் தடைக் குறித்து முறையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என கேட்டுள்ளதாக அதனுடன் நெருங்கிய தொடர்புடைய நபர் ஒருவரால் தகவல் வெளியாகி உள்ளது.

டிஜிட்டல் சொத்துக்கள் மீதான யூபிஐ பேமெண்ட் (UPI) தடை குறித்து சரியான பதில் அளிக்க வேண்டும் என வங்கிகள் என்பிசிஐக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்நபர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி என்பிசிஐ இன் மற்றொரு பணப் பரிமாற்ற சேவையான ஐஎம்பிஎஸ் (IMPS) சேவையையும் கிரிப்டோ வர்த்தகத்தில் மறைமுகமான தடையை விதித்துள்ளதும் வெளியாகியுள்ளது.

இந்திய மத்திய வங்கி 2020 இல் முன்னறிவிப்பு எதுவுமின்றி வங்கிகள் கிரிப்டோ பேமெண்டுகளை அனுமதிக்க கூடாது என வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து என்பிசிஐ மீது வழக்கு தொடரப்பட்டு தீர்வு காணப்பட்டது.

அதேபோல என்பிசிஐக்கும் நடக்கலாம் என வங்கித் தரப்பில் முக்கிய அதிகாரிகள் கூறியதாகவும் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

Related posts