சினிமா ஒரு வியாபாரம் என்றால் அதை மறுப்பார் யாரும் இல்லை. ஆனால் தங்கள் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மற்ற தயாரிப்பாளர்களை திரைப்பட வினியோகஸ்தர்களை வியாபாரம் செய்ய விடாது ஒடுக்குவது என்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்றே பார்க்க முடியும்.
ரெட் ஜெயின்ட் மூவிஸ்(Red Giant movies) உரிமையாளரும் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும், அரசியல்வாதியுமான திரு . உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
பல முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ஒரு தயாரிப்பாளர் படங்கள் வாங்கி விற்பது இயல்புதான். ஆனால் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்ற எந்த தயாரிப்பு நிறுவனங்களையும் வியாபாரம் செய்ய விடாது, திரைத்துறையை தனி உரிமையாக வைத்துக்கொண்டு (Monopoly) செயல்படுகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் உருவாகியுள்ள சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்துள்ள டான்(Don) படத்திற்கான திரையரங்கு உரிமையை ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வாங்கியுள்ளது. குறிப்பாக பாக்ஸ் ஆபிஸ் பிரபலங்களான, ரஜினி,கமல்,அஜித், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி என்று அனைவரின் திரைப்படங்களையும் கைப்பற்றி வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த அண்ணாத்த படத்திற்கு திமுக வின் கலாநிதி மாறன் அவர்களின் சன் பிக்சர்ஸ் (Sun picture) நிறுவனம் தயாரிக்க, திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை ரெட் ஜெய்ன்ட் எடுத்துக்கொண்டது. திரைப்பட உரிமையாளர்களும் இந்த திராவிட லாபியை எதிர்க்க வழியில்லாமல் அவர்களின் அராஜக போக்கிற்கு அடிபணிந்து போகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப் படுகின்றனர். திரையரங்கு நிர்வாகத்திற்கு 30-40% என்றும் ரெட் ஜெய்ன்ட் நிறுவனத்திற்கு 60-70% பங்குகள் என்றும் பகிர்ந்து கொள்ளப்படுவதாக கோலிவுட் வட்டார செய்திகள் கூறுகிறது.
நடிகர் அஜித் அவர்கள் நடித்த வலிமை திரைப்படம், விஜய் அவர்களின் பீஸ்ட் திரைப்படம் என அனைத்து படங்களின் விநியோகஸ்தர் உரிமையையும் ரெட் ஜெய்ன்ட் வாங்கியது. தமிழ் சினிமாவின் அனைத்து உச்ச நட்சத்திரங்களின் கால்ஷீட்களும் இன்று இவர்கள் வசம் தான் உள்ளது என்பது தெளிவாக வெளிப்படுகிறது.
அடுத்ததாக வெளியாகவுள்ள கமல்ஹாசன் அவர்கள் நடித்துள்ள விக்ரம் படத்தின் விநியோகஸ்தர் உரிமையையும் ரெட் ஜெய்ன்ட் வாங்கியுள்ளது.
குறிப்பாக ரெட் ஜெயின்ட் நிறுவனம் ரிலீஸ் செய்யும் படத்திற்கு மட்டுமே தமிழகத்தின் திரையரங்குகளில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று நிர்பந்திக்கபடுவதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக தற்போது வெளியான K.G.F-2 படத்திற்கு வெறும் 200 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது என்கிற ஓர் சர்ச்சையும் உள்ளது.
2006-2011 வரை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி கட்டிலில் இருந்த போது கலாநிதி மாறன் அவர்களின் சன் பிக்சர்ஸ் (sun pictures) நிறுவனமும் இதைப்போன்ற திரைத்துறை கபலிகரத்தை செய்துதான் வந்தது. 2008-ல் வெளியான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படம் மூலம் திரைப்பட விநியோகஸ்தர்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன் பாதையை தொடங்கி, அவர்கள் தயாரித்த முதல் படம் பல கோடி பட்ஜெட்டில் உருவான இயந்திரன் ஆகும்.
2011-ல் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், இவர்களின் அராஜகம் சற்று வெளிவராது இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2018-ல் சர்க்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ், பேட்ட , நம்ம வீட்டு பிள்ளை என்று அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி விற்க ஆரம்பித்து விட்டது.
இன்று அவர்களின் ஆட்சி என்பதால், திரையரங்குகள், தொலைக்காட்சி மற்றும் Sun next OTT என அனைத்து தளங்களையும் தன் அதிகார வலையத்திற்குள் கொண்டு வந்துவிட்டனர். இதனால் சினிமாவை மட்டுமே தன் வாழ்வாதாரமாக கொண்டுள்ள, பல்வேறு சிறிய அளவிலான தயாரிப்பு நிறுவனங்களையும் அவர்களை சார்ந்த குடும்பங்களையும் இது பாதிக்கும்