அறிவியல்

செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம் சாத்தியமா ?

மனித இனம் அடுத்த பில்லியன் ஆண்டுகளுக்கு வாழ வேண்டும். எனவே மனிதன் இதுவரை போகாத கிரகங்களுக்கு போக வேண்டும் என ஸ்டீபன் ஹாக்கிங் சொல்கிறார் . இதற்கு காரணம் உண்டு .165 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக பூமியில் டைனோசர் என்ற மிகப்பெரிய உயிரினம் வாழ்ந்ததற்கான படிமங்கள் இப்போது கிடைக்கின்றன.

இவ்வளவு பெரிய உயிரினம் மறைந்துபோனதற்கு காரணம் என்ன? அப்போது பூமியின் மீது பெரும் விண்கல் ஒன்று மோதியது. இது தான் காரணம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மீண்டும் அப்படியொரு நிகழ்வு நடக்குமாயின் மனித இனம் அழிந்துபோகும்.

அப்படிப்பட்ட பேரழிவை தவிர்க்க வேண்டுமெனில் பூமியை தவிர்த்து வேறு பல இடங்களிலும் மனிதனை குடியேற செய்யவேண்டும். இதுதான் நாம் செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்திற்க்காக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முக்கியக்காரணம்.

மக்கள்தொகை அதிகரிப்பு, அதிவேக சுற்றுசூழல் பாதிப்பு, அரசியல் நிலையற்ற தன்மை, வளங்கள் போதாமை .இவை போன்ற பல்வேறு காரணங்களால் பூமி அச்சுறுத்தலை அன்றாடம் சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறது.

எங்கிருந்தோ வரும் விண்கல் வந்துதான் பூமியை அழிக்க வேண்டும் என்பதில்லை. நாமே நம்மை அழித்துக்கொள்வோம். இவற்றில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவேண்டும். நிச்சயமாக விண்வெளிக்கு மேலே மக்களை குடியமர்த்திட வேண்டும்.

மனிதனின் பேரார்வம்

தெரியாத ஒன்றினை தெரிந்துகொள்வதில் மனித இனத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது.  அந்த பேரார்வம் தான் அமெரிக்காவை கொலம்பஸ் கண்டறிய உதவியது.நீல் ஆம்ஸ்டராங் நிலவிற்கு செல்ல உதவியது.

அந்த வகையில் தான் மனிதனின் செவ்வாய் கிரக பயணமும் துவங்கியது எனலாம். இந்த பிரபஞ்சத்தில் எங்கேயாவது தங்களைப்போன்ற உயிரினங்கள் வாழ்கின்றனவா? பூமியைப்போல வாழத்தகுந்த கிரகங்கள் எங்கேயேனும் இருக்கின்றனவா? என தேடத்துவங்கியது மனித மூளை.

அருகில் இருக்கும் ஒரே கிரகம்

பூமியைப்போன்று உயிரினம் வாழத்தகுந்த கிரகங்களில் செவ்வாய் தான் பூமிக்கு மிக அருகில் இருக்கும் ஒரே கிரகம். அதனால் தான் மனிதன் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல முயற்சி செய்கிறான்.

இந்த நூற்றாண்டில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு மிக முக்கியமான விசயமாக செவ்வாய் கிரக குடியேற்றம் இருக்கும்.அமெரிக்கா இந்த முயற்சியில் இறங்காவிட்டால் பிற நாடுகள் அதனை செய்யும்.

எனவே தான் ஒவ்வொரு நாடும் செய்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்துவதற்கான ஆய்வுகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.

நிச்சயம் ஒருநாள் மனிதர்கள் பூமி தவிர்த்து வேறு பல கிரகங்களிலும் வாழ்வார்கள். அப்போது நம் இனம் பிறந்த இடம் அதுதான் என ஒரு நட்சத்திரத்தை காட்டி ஆசிரியர் வேறொரு கிரகத்தில் விண்வெளி பாடம் எடுத்துக்கொண்டு இருப்பார்.

Related posts