அரசியல்தமிழ்நாடு

கொடநாடு கொலை வழக்கில் புதிய திருப்பம்; சசிகலாவிடம் தனிப்படை விசாரணை!

கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் புதிய திருப்பமாக இன்று சசிகலாவிடம் தனிப்படை குழு விசாரணை நடத்தவுள்ளது.

கொடநாடு எஸ்டேட்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டிற்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோர் பங்குதாரர்கள். 1994 இல் 9 கோடிக்கு வாங்கப்பட்ட இந்த எஸ்டேட்டின் மதிப்பு தற்போது 1000 கோடி என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தான் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் கொடநாடு எஸ்டேட்டில் அரங்கேறியது.

அடுத்தடுத்து நடந்த 5 கொலைகள்

நள்ளிரவில் பங்களாவிற்குள் புகுந்த கொள்ளையர்கள், காவலாளி ஓம் பகதூரை கொடூரமாக கொலை செய்தனர். கொள்ளையர்கள், தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மாறாக காவல்துறையினர் கடிகாரம் போன்ற பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக விசாரணை முடிவில் தெரிவித்தனர்.


இந்நிலையில் கொள்ளை சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சம்பவம் நடந்த ஓரிரு நாட்களிலையே விபத்தில் உயிரிழந்தார். கனகராஜ் மரணத்திற்கு  முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், கேரளாவிற்கு தப்பி செல்லும்போது சாலை விபத்தில் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, ஒருசில நாட்களிலில் கொநாடு எஸ்டேட்டின் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரான தினேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அடுத்தடுத்து நடந்த 5 கொலை சம்பவங்கள், காவல் துறையினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சசிகலாவிடம் விசாரணை 

இதுவரை கொடநாடு சம்பவம் தொடர்பாக  207 பேரிடம் விசாரணை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படைக்குழு விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Related posts