சினிமாதமிழ்நாடுவெள்ளித்திரை

புது வீடு – செம சந்தோஷத்தில் பரியேறும் பெருமாள் நடிகர்!

புது வீடு – செம சந்தோஷத்தில் பரியேறும் பெருமாள் நடிகர்!

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தங்கராசு என்ற கிராமிய நடனக்கலைஞருக்கு சமூக செயல்பாட்டாளர்களும், அரசும் இணைந்து புதிதாக வீடு ஒன்றைக் கட்டிக் கொடுத்துள்ளது.

பரியேறும் பெருமாள்

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக இருந்த மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் கடந்த 2018ம் ஆண்டு திரைக்கு வந்தது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த இந்த படம் மிகப் பெரிய பாராட்டை பெற்றது.

இதில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இரு சாதி பிரிவினரை மையப்படுத்தி படத்தின் கதை களம் அமைந்து இருக்கும். இந்த படம் சாமானிய மக்களின் வலியையும், இன்றளவும் நடந்து வரும் சாதிய ஒடுக்குமுறை பற்றியும் பதிவு செய்து இருக்கும்.

பாரதிராஜா பாராட்டு

இயக்குனர்களின் ஜாம்பவான் என்று அழைக்கும் சிலரில் முக்கியமானவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவர் சமூக வலைத்தளத்திலும், பரியேறும் பெருமாள் வெற்றி விழாவிலும் இயக்குனர் மாரி செல்வராஜ்சை வெகுவாக பாராட்டினார். பாரதிராஜா மட்டுமின்றி பல இயக்குனர்களும் பாராட்டினார்கள். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல முன்னணி நடிகர்கள் மாரி செல்வராஜிடம் கதை கேட்க தொடங்கினர்.

.

பரியேறும் பெருமாள் வெற்றிக்கு இன்னொரு மிக முக்கியமான காரணமாக கூறப்படுவது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்கள் தேர்ந்தெடுப்பு. இதில் நடித்த நடிகர்கள் அந்த கதாபாத்திரமாகவே பிரதிபளித்தனர். அந்த படக்குழுவில் இருந்த பல நடிகர்கள் திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா துணை நடிகர்களும் பாராட்டு பெற்றாலும் குறிப்பாக படத்தில் ஆணவ கொலைகளை  செய்யும் தாத்தாவாக வந்த கராத்தே வெங்கிடேசனின் நடிப்பும், ஹீரோவின் தந்தையாக நடித்த கிராமிய நடன கலைஞர் தங்கராசின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது.

புது வீடு

வெகுவான மக்களின் பாராட்டை பெற்ற கிராமிய கலைஞர் தங்கரசுக்கு, சமூக செயல்பாட்டாளர்களும், அரசின் சார்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளரும் இணைந்து புதிய வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளனர். இந்த வீட்டின் புதுமனை புகுவிழாவில் இயக்குனர் மாரி செலவராஜ், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மாரி செல்வராஜ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கும், அரசுக்கும் மற்றும் சமூக செயல்பாட்டாளருக்கும் நன்றி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய தங்கராசு, இது அனைத்துக்கும் மாரி செல்வராஜ் ஐயாவுக்கு தான் நன்றி சொல்லவேண்டும் என்று ஆனந்த கண்ணீரோடு தெரிவித்தார்.

Related posts