சமூகம்சினிமா

அட்லீ பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்திய இரு முன்னணி நடிகர்கள்!

பிரபல இயக்குனர் 

2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதனைத்தொடர்ந்து தெறி, பிகில், மெர்சல் என அடுத்தடுத்து விஜயை வைத்து இயக்கியதின் மூலம் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்தார். இவர் தற்போது பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

வாழ்த்து 

இந்நிலையில், இயக்குனர் அட்லீ நேற்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனை இயக்குனர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.

Related posts