தமிழ்த்திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில், நடிகர் வடிவேலு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் நடித்து வரும் மாமன்னன் திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்துளேன். மேலும், நாய் சேகர் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளேன். இனி வரும் படங்களில் துணை நடிகர்களை இணைத்துக்கொண்டு நடிக்க போகிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணிக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன்’ என்று கூறியுள்ளார்.