சினிமாவெள்ளித்திரை

தணிக்கை சான்றிதழ் பெற்ற தனுஷ் படம்!

தணிக்கை சான்றிதழ்

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘நானே வருவேன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Related posts