மில் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் மோதியதில் 3 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவன் பலி
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள சத்தியமூர்த்திநகரில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு பொன்ராம் என்ற மூன்று வயது மகன் உள்ளார். இந்நிலையில், சிறுவன் பொன்ராம் வீட்டின் அருகே உள்ள சாலையில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த வேன் ஒன்று சற்றும் எதிர்பாராத வகையில் சிறுவன் மீது மோதியது. அதில் சிறுவனுக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கைது நடவடிக்கை
அதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சமயநல்லூர் காவல்துறையினர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அந்த வேன் ஓட்டுநர் ஷேக் அப்துல்லா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

