கோ.நம்மாழ்வார், 6 ஏப்ரல் 1938 முதல் – 30 டிசம்பர் 2013 வரை இவரது வாழ்வுக்காலம். இவர் ஒரு இந்திய பசுமைப் போராளி, வேளாண் விஞ்ஞானி, சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் இயற்கை வேளாண்மை நிபுணர் ஆவார்.
தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் முன்மொழிந்துள்ள மீத்தேன் எரி வாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார். நம்மாழ்வார் இயற்கை விவசாயம், இயற்கை பூச்சிக்கொல்லிகள் மற்றும் இயற்கை உரங்கள் பற்றிய பல தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை எழுதியவர். மேலும், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ளார்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று..! #Nammalvar | #PesuTamizhaPesu | #பேசுதமிழாபேசு pic.twitter.com/yxdUqmKFUx
— Pesu Tamizha Pesu (@pesutamizhapesu) April 6, 2022
நம்மாழ்வார் சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஃபார்ம் ரிசர்ச் மற்றும் குளோபல் ஃபுட் செக்யூரிட்டி டிரஸ்ட் அல்லது வானகம் என்ற அமைப்பை நிறுவி, இயற்கை விவசாயத்தின் நன்மைகள் மற்றும் பாரம்பரிய விவசாய முறைகளில் எதிர்கொள்ளும் ஆபத்துகள் மற்றும் சிரமங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வானகம் தமிழ்நாட்டின் கரூரில் அமைந்துள்ளது.
- இரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டம்,
- தமிழகத்தில் மீத்தேன் எடுப்பதற்கு எதிரான போராட்டம்,
- இந்தியாவில் பிடி கத்தரி அறிமுகத்திற்கு எதிரான போராட்டம்,
- மாட்டிறைச்சி உண்பதற்கும், மாடுகளை கேரளாவிற்கு கடத்துவதற்கும் எதிரான போராட்டம், போன்ற போராட்டங்களை மக்களுக்காக செய்தவர்.
நம்மாழ்வாரின் கருத்து:
“இவ்வளவு செலவு செய்யும் ஒரு தேசத்தில் படிப்பு முடியும்போது அறிவைப் பயன்படுத்துவதற்கான வேலை தயாராக இல்லாததால், அது பெரும் சுமையாக முடிந்து விடுகிறது.”
― நம்மாழ்வார் , உழவுக்கும் உண்டு வரலாறு.