சினிமா

மூன் நைட் டிவி சீரிஸ் எப்படி இருக்கு? ஒரு பார்வை..!

மூன் நைட் என்ற ஆங்கில தொடர் விறுவிறுப்பும் சுவாரசியமும் நிறைந்த தொடராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் சற்று அதிகரித்துள்ளது.

மூன் நைட் தொடரின் முதல் தொடர் “30 மார்ச் 2022” அன்று வெளியாகி உள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக ஆங்கில நடிகர் “ஆஸ்கார் ஐசாக்” (மூன் நைட்) கதாநாயகராகவும், “மே காலமாவ்ய்” (லயோலா) கதாநாயகியாகவும், “ஏதன் ஹவ்க்கி” (ஆர்தர் ஹாரோ ) வில்லனாகவும் நடித்து மூன் நைட் வெளியாகி உள்ளது. இது “மார்வெல் ஸ்டூடியோஸ்” தயாரிப்பில் நேற்றுவெளியாகி ஒரு புதிய கதை வடிவில் வந்துள்ளதாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. ஆனால் பொதுவான பார்வையாளர்களுக்கு “இயக்குனர் ஷங்கர்” இயக்கத்தில் “நடிகர் விக்ரம்”, “நடிகை சதா”, “நகைச்சுவை நடிகர் விவேக்” கூட்டணியில் வெளிவந்த அந்நியன் திரைப்பட பாணியில் இருப்பதாக கருத்து நிலவுகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிகை சதா நகைசுவை நடிகர் விவேக் இவர்கள் கூட்டணியில் இணைந்து உருவான அந்நியன் திரை படம் 17 ஜூன் 2005 அன்று வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று சமூகத்தில் நடைபெறும் பல தவறுகளை சாமானிய மக்களில் ஒருவன் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும், அதனால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை ஒரு சாரார் நிலையில் இருந்து காண்பிக்கப்பட்டு இருக்கும்.

அந்நியன் படத்தின் கதை: பன்முக ஆளுமைக் கோளாறால் பாதிக்கப்பட்ட ராமானுஜம் பகலில் வழக்கறிஞராகவும், இரவில் சமூக காவலராகவும் பணியாற்றுகிறார். பல்வேறு சமூகவிரோதக் கூறுகளை அம்பலப்படுத்த ‘கருட புராணத்தின்’ குறிப்புகளை அவர் தனது கருவியாகப் பயன்படுத்துகிறார்.

மூன் நைட் தொடரின் கதை: பன்முக ஆளுமைக் கோளாறால் பாதிக்கப்பட்ட கதாநாயகன் பகலில் எகிப்தியன் சார்ந்த அருங்கட்சியாம் ஒன்றில் வேலை செய்யும் நபராகவும், இரவில் “மூன் நைட்” என்ற நபராகவும் இருப்பார். வில்லன் மற்றும் அவரின் கூலிப்படைகள் எகிப்திய கடவுள்களின் மர்மங்களை வைத்து செய்யும் தவறுகளை தடுக்கும் கதை தான் மூன் நைட்.

முதல் பாகத்தில் திரைக்கதை நன்றாகவே இருந்தது ஆஸ்கார் ஐசாக் (மூன் நைட்) கதாநாயகராகவும் நன்றாகவே நடித்துள்ளார். பன்முக ஆளுமைக் கோளாறால் பாதிக்கப்பட்ட கதாநாயகன் தன்நிலை மறந்து செய்யக்கூடிய செயல்கள் மிகவும் எதார்த்தமாகவும் கதையுடன் இணைந்து பார்ப்பவர்களையும் கவரும் விதமாக இருந்தது. ஆனால், தொடரில் சில இடங்களில் வன்முறை அதிகமாகவும், குழந்தைகளை கவரும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட காரணத்தால் நகைச்சுவை கலந்து இருக்கிறது. இறுதியில் கதையின் முடிவு நன்றாகவே அமைந்துள்ளது.

மூன் நைட்டின் அடுத்த தொடர் அடுத்த வாரம் “6 ஏப்ரல் 22” புதன்கிழமை அன்று வெளியாகவுள்ளது.

 

Related posts