தமிழ்நாடு

ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திடுக – கே.பாலகிருஷ்ணன்!

முதுகுளத்தூர் ஒன்றில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதி ரீதியாக இழிபடுத்திய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  கே.பாலகிருஷ்ணன்.

 

முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் சாதி ரீதியாக இழிவுபடுத்தியாக புகார் கிளம்பிய நிலையில், ராஜகண்ணப்பனிடமிருந்து போக்குவரத்து துறை மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் ராஜ கண்ணப்பன் விவகாரத்தில், முதலமைச்சர் உடனடியாக கவனம் செலுத்தியது பாராட்டுக்குரியது என்றும், ஆனால், துறையை மாற்றுவது மட்டுமே தீர்வாகி விடுமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், ராஜ கண்ணப்பன் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்ட குற்றம் என்றும், அச்சட்டத்தின் படியே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளார். சாதிய ஆணவம் மற்றும் தீண்டாமைக்கு எதிராக என்ன விலையையும் கொடுக்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார் கே.பாலகிருஷ்ணன்.

Related posts