தமிழ்நாடு

ராஜகண்ணப்பன் விவகாரம் ; இதுதான் திமுகவின் சமூகநீதி – ஜெயக்குமார் விமர்சனம்!

பட்டியலின அதிகாரி ஒருவரை சாதி ரீதியாக இழிவுபடுத்திய அமைச்சர் ராஜகண்ணப்பனை அமைச்சரவையிலிருந்தே நீக்காமல், அவரது இலாகாவை மட்டும் மாற்றுவதே திமுகவின் சுய ரூபத்தை வெளிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார் அதிமுகவின் முன்னணி தலைவர் ஜெயக்குமார்.

இது தொடர்பாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாவது, முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் சாதி ரீதியாக இழிவுபடுத்தியாக புகார் கிளம்பிய நிலையில், ராஜகண்ணப்பனிடமிருந்து போக்குவரத்து துறை மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. இதுதான் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்படும் தண்டனையா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், திமுகவின் விடியல் ஆட்சியின் சுயரூபத்தை இந்த விவகாரமே நமக்கு வெளிக்காட்டும். ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களை இழிவுபடுத்திவிட்டு இவர்கள் சமூக நீதி பேசி என்ன பயன் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார் ஜெயக்குமார்.

Related posts