சினிமாவெள்ளித்திரை

பொதுமக்களை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் !

திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற மு.க.ஸ்டாலின் திடீரென காரில் இருந்து இறங்கி வந்து பொதுமக்களை சந்தித்தார்.

முதல்வர் ஸ்டாலின்

பாப்பீஸ் ஓட்டலில் நடைபெற்ற தொழில் முனைவோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் குமார் நகரில் இருந்து காலை 9.50 மணியளவில் கார் மூலம் திருமுருகன்பூண்டிக்கு சென்றார். அப்போது 60 அடி சாலை, எஸ்.ஏ.பி.தியேட்டர் பெரியார்காலனி, அனுப்பர்பாளையம், பெருமாநல்லூர் நால்ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்று திரண்டு முதல்வரை வரவேற்றனர்.

கோரிக்கை மனு

இந்நிலையில், திடீரென காரில் இருந்து இறங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும், அந்த கோரிக்கை மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Related posts