இலவசங்களை கையாள்வதில் தமிழகம் சரியாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். கூறுகையில், ‘இலவசங்கள் தவறு என்ற வாதம் தவறு என்று தெரிவித்தார். இலவச திட்டங்களை யாருக்கு கொடுக்கிறோம் என்பது தான் முக்கியம். இதனை சரியாக செயல்படுத்தியதால் தான் இன்று தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

